Home Tamil Kavithaigal Creativesoulhacker

Creativesoulhacker

by Anirud Srinivas

சிறகை விரித்து

சிட்டாய் பறந்தேன்

தோடுந்தூர வானம்

தொடாமல் கரைந்தேன்

முகமுடியாய் கூந்தல் மறைக்க

நடுவிரல் கொண்டு ஒதுக்கி

உன்னைபார்த்தேன்

பாதைகள் இன்றி

பயணங்கள் கொண்டேன்

பாதங்கள் தேய

உன்னை பின்தொடர்ந்தேன்

விழி கோடி வேண்டுமே

உன்னை அனு அணுவாய் ரட்சிக்கவே

மந்திரங்கள் ஓதினாயோ

என் தந்திரங்களை வென்றுவிட்டாய்

சொல் கண்மணி…

இன்னும் எத்துணை ஆழம்

உன் விழி குழியிலே..!

இன்னும் எத்துணை காலம்

உன் நினைவுகளிலே..!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.