


எனது இந்தியா
நம் பாட்டனார் மீட்டு தந்த சுதந்திரம்
இங்கு ஒருவருக்கூட இல்லையிடம் நிரந்தரம்
அன்னிய நாட்டு சூழ்ச்சி இயந்திரம்
விவசாயத்தை அழிக்க வந்த தந்திரம்
பசுமை நிறைந்த மண்ணாகியது நம் பாரதம்
உலகம் உரக்க அதிரச் சொல்வோம்
ஒற்றுமை எங்களின் நிரந்தர அடையாளம்
தேசம் காக்கும் முப்படை காவலனும்
தொய்வின்றி சமுகப்பணி புரிகின்ற வீரனும்
இனிவரும் காலம் உறுதி எடுப்போம் அனைவரும்
வெளிநாட்டு பொருட்களுக்கு தடைகொடுப்போம்
நம் இந்திய உற்பத்திக்கு மதிப்பளிப்போம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும்
மனிதத்தை அன்பால் போற்றிடுவோம்
🙏ஜெய்ஹிந்த்🙏