யார் பெரியார்?

மூடனே வேண்டாம்  மூட நம்பிக்கை  என்றார் 

பசிக்கு  உணவளிப்பவன்  இறைவன் என்றார் 

வேற்றுமை வாழ்வதற்கு 

சக மனிதன் வீழ்வதற்கு 

வித்திடும் உன் சாதியை 

பெரிதென கருதும் உன் வியாதியை 

அரவே ஒழிக்க நினைத்த வாதியே.. 

நாத்திகவாதியே பெரியார்.

பலி கொடுத்து உயிர் அழித்துமனம் மகிழும் மூடனே..

உயிரை அழித்து  இரத்தம் தெளித்தாய்

அழிந்த அவ்வுயிரை காக்காத உன் தெய்வம் 

அழித்த  உன்னையா காக்கும் என்கிறாய்? 

என்றுரைத்த மனிதனே பெரியார் 

பெண்ணே, கோல் பிடித்து கோலாட்டம் ஆடுவது ஓர் அழகு 

சிலம்பேந்தி சீறிப்பாய்வதிலே

 பெண்ணிற்கு பேர் அழகு 

போர் கற்று பழகு..

என பெண்களை ஊக்கமூட்டி 

விழித்தெழ செய்த எம் தந்தையே பெரியார்.

அன்பே கடவுள் என அறவழி காட்டடிய.. 

சாதியை தாண்டி சாதனை புரிய ஊக்கமும் ஊட்டிய.. 

பெரியாரின் வழி செல்லும் யாரும் பெரியார்.. நானும் பெரியார்..

Leave a Reply