



ஆசைகளை அடைய ஓடினோம் …….
இறுதியில் ஆசை காகித பணத்திற்காகத்தானே…..
அறிந்தவன் அறிவால் வெல்கிறான் …….
அறியாதவனோ பாவம் ………
அரிவாளால் வீழ்கிறான் …… சொத்திற்காக …….
மனிதமும் மனமும் தேடினோம் …..
மனிதம் கூட பணம் தான் வேண்டும் என்றது ……
விளை நிலத்தை அழித்து விலை ஒன்று கண்டாய் …..
விலை உயர்ந்த உடமையை காக்க மறந்தாய் ……
உணவின்றி ஒரு நாள் காகிதம் தின்பாய் …
காகிதம் கூட அட்டைகளாக மாறக் கண்டாய் …….
உலக அழிவை எதிர்நோக்கும் மனிதனே …..
மனித இனமே அழியும் ஒரு நாள் …..
காகித மாயையால் ………..