


மின்மினியை பிடித்துவிட்டு…
விண்மீன் என்று எத்தனித்த நாட்கள்….
பயணங்களில் பின்னோக்கி செல்லும்
மரங்களை கண்டு..வியப்பில்
கேள்விகள் தொடுத்த நாட்கள்….
திருட்டு மாங்காய்
தான் ருசிக்கும் என
மரமேறி விழுப்புண் ஏந்திய நாட்கள்….
கற்பனைகளும் கனவுகளுமாய்
அசட்டு நடை போட்ட நாட்கள்…
பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அழுது…
அதே பள்ளியில் இருந்து
கண்ணெல்லாம் குளமாக
பிரியா விடை பெற்று வந்த நாட்கள்…
ஒவ்வொரு விடியலிலும்
புதுமை எதிர்பார்த்த
அந்த பருவ நாட்கள்….
பசுமை மாறாமல்
இன்னும் நம் நெஞ்சங்களில்…..♥️