



செய்ததை மறைத்து அடக்கமாய் சிலர்…
செய்யாத நன்மையும் செய்ததாய் சிலர்…
நட்பென்று சொல்லி நாடகமாக சிலர்…
தூரமாய் நின்றும் துணையாக சிலர்….
அறிவாளி என்ற ஆனவத்தில் சிலர்..
அறிவால் அமைதியை கற்றவர் சிலர்…
வார்த்தையால் வஞ்சகம் செய்பவர் சிலர்…
வாய்மூடி வரலாறு படைத்தவர் சிலர்…
ஆண்மையை பெண்ணிடம் காண்பிப்பார் சிலர்…
ஆணாக பெண்களை மதிப்பவர் சிலர்….
காலப்போக்கில் கண்ணியம் கற்றவர் சிலர்…
காலங்கள் கடந்தும்…
கர்வமாய்…..
கல்லாகவும் சிலர்!!!