கல்வி

புத்தகம் துறந்து …

பக்கங்கள் புரட்டி…

கற்றல் அல்லவே கல்வி….

வாழ்க்கை உணர்ந்து….

முயற்சி முதிர்ந்து

வென்றால் அல்லவோ கல்வி….

மதிப்பெண் பெற்றவனோ

மதில் மேல் மந்தமாய்….

மதி இழந்தவனின் பெயர் பெற்றவநோ…

மகத்தான வெற்றிகளோடு

கண்டுள்ளோம் நாமே…..

தடத்தில் செல்லும் ரயில் போல….

பாதை மேல் சென்றாயோ….

பகுத்தறிவு என்றெண்ணி…

புதுமை கற்க மறந்தாயோ….

தடம் புரண்ட ரயிலின் 

நிலைக்கண்டு அஞ்சாதே …..

புது தடம் தேடி செல்ல 

ஒருபோதும் அஞ்சாதே….

கல்வியில் புதுமை கற்றல்….

காலத்திற்கும் பலம் சேர்க்கும்

கருவியடா மானிடா……..

Leave a Reply