என் அன்பு அன்னைக்கு !

Purest Form Of Love: Mother's love | MAA - My Blog

சமர்ப்பிக்கிறேன் அன்னையே, இந்த கவிதையை உனக்கு,

உன் அருமை தெரியவில்லை உன்னோடு நான் இருக்கையில்

உன் கஷ்டம் உணரவில்லை உனக்கு வேலைகள் பல கொடுக்கையிலே

தவறு எதும் செய்தேனோ தனியாக ஏன் தவிக்க விட்டாய்?

ஆசையுடன் நீ சமைத்து என் வாயில் ஊட்டுகையில்

முகம் சுழித்து உன் மனதை அயறமல் நோகடித்தேன்

இன்றோ வேறொருவர் சமைத்து என் தட்டில் போடுகையில்

உணருகிறேன்  அன்னையே  நீ  அளித்ததே  அமுதமென்று 

நிலா காட்டிச்  சோறு ஊட்டிய  நீ  உண்டாயா  என்றே தெரியவில்லை

வழி அறியா  பேதை எனக்கு  நீ காட்டிய  வழி தனிமையோ? 

என் இன்பமும் துன்பமும் பெரிதாகத்  தெரியவில்லை 

கை கொடுத்து  கண் துடைக்க அன்பு அன்னை நீ இருந்த போழுது

 இப்பொழுது  என் கவலை முழுவதும் என்னோடு நீ இல்லாததே 

குழந்தையில்  நான் அழுதேன்  பால் கொடுத்து நீ அணைத்தாய் 

இப்பொழுதும் நான் அழுகிறேன்  உன் வரவை தினம் நாடி 

இனி உன் இஷ்டப் படி இருக்கிறேன்  கஷ்டத்தை உணர்ந்து  நடக்கிறேன் 

உன் அருமை உணர்ந்துவிட்டேன் என்  தாயே 

என்னை வந்து அழைத்துச்செல்,  உன் கரம் பிடித்து  வருகிறேன்

நிலாச் சோறு ஊட்ட  வேண்டாம் 

மடியில் வைத்து கொஞ்ச வேண்டாம் 

உன்னோடு அழைத்துச்செல் போதும் 

அந்நாளே  எனக்கு  பொன்னாளாகும்.

Leave a Reply